செவ்வாய், 23 மே, 2023

பாடல் (15) கோள்களின் நட்பு வீடும் பகை வீடும் !

 

                      சூரியன்

கடகம்         தனுசு          கருந்தேள்     மீனம்

கதிரவன்      நட்பைக்       கவரும்        ராசிகள் !

அடலேர்       இடபம்         மகரம்         கும்பம்

ஆதவன்       பகைமை!      அடையும்      வீடுகள்

-----------------------------------------------------------------------------

நட்பு வீடுகள்     :   கடகம், தனுசு, விருச்சிகம், மீனம்

பகை வீடுகள்     :   ரிஷபம், மகரம், கும்பம்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

அருஞ்சொற்பொருள்

கருந்தேள்          = விருச்சிகம்    

அடலேர்             = காளை                   

இடபம்              = ரிஷபம்

 

                     சந்திரன்

மிதுனம்       சிம்மம்         மிருதுளங்     கன்னி

மேவிய        மூன்றும்       பால்மதி       நட்பே !

நொதுமல்     நிலையாம்    ஏனைய        மனைகள்,

நுவலப்        பகையகம்     இலையென   அறிவாய் !

--- - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

நட்பு வீடுகள்     :    மிதுனம், சிம்மம், கன்னி

பகை வீடுகள்    :     இல்லை

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அருஞ்சொற்பொருள்

பால்மதி          = சந்திரன்

நொதுமல்        = நடுநிலை

நுவல             = சொல்வதற்கு

 

             செவ்வாய்

சிம்மம்         தனுசு          சித்திர          மீனம்

செவ்வாய்      நட்புச்          சீரகம்          மீன்றே !

அம்பர          மிதுனம்        அருங்கைக்    கன்னி

அங்கன்        செவ்வாய்      அழிபகை       வீடே !

நட்பு வீடுகள்     :    சிம்மம், தனுசு, மீனம்

பகை வீடுகள்     :    மிதுனம், கன்னி

அருஞ்சொற்பொருள்

சீரகம்               = இராசி வீடு

அம்பரம்             = வானம்

அங்கன்             = புதல்வன்

 

                புதன்

 

புல்லம்        சிம்மம்         புல்லிய        துலையே

புதனுக்        குரிய          நட்பக          மாகும் !

தொல்லிய    கடகம்         தெறுக்கா      லிரண்டும்

தோமில்       புதனின்        பகையகம்     தானே !

நட்பு வீடுகள்    :    ரிஷபம், சிம்மம், துலாம்

பகை வீடுகள்   :     கடகம், விருச்சிகம்

அருஞ்சொற்பொருள்

புல்லம்              = (காளை) ரிஷபம்

துலை               = துலாம்

தெறுக்கால்         = தேள் (விருச்சிகம்)

 

                  குரு

குருவுக்கு      நட்பில்லம்     நான்கு     --   உயர்

கோலமா       மேடமுடன்     கொல்லரிமா   கன்னி !

விருச்சிகமும்  நட்பாகும் !     விடை,மிதுனம் பகையே,

விளங்குதுலை மூன்றெனவே  விவரித்தேன்   கொள்க !

நட்பு வீடுகள்   :   மேழம், சிம்மம், கன்னி, விருச்சிகம்

பகை வீடுகள்  :    ரிஷபம், மிதுனம், துலாம்

அருஞ்சொற்பொருள்

நட்பில்லம்       = நட்பு வீடுகள்

கோலமா         = அழகிய ஆடு

கொல்லரிமா     = (வேட்டையாடும் சிங்கம்) சிம்மம்

விடை            = (காளை) ரிஷபம்

              சுக்கிரன்

மிதுனம்,       தனுசு,          மகரம்,     கும்பம்,

மின்மினி       சுக்கிரன்        நட்பக      மாகும் !

கதுகால்        நண்டு,         கபிலச்     சிம்மம்,

கணக்காய்     இரண்டும்      கடும்பகை  வீடாம் !

நட்பு வீடுகள்    :   மிதுனம், மகரம், கும்பம்,

பகை வீடுகள்    :   கடகம், சிம்மம்

அருஞ்சொற்பொருள்

மின்மினி         =மின்மினி போல் இரவில் ஒளிரும்

கதுகால்          = கவ்விப் பிடிக்கும் கால்

கபிலச் சிம்மம்   = கபில நிறச் சிங்கம்

 

                சனி

இருஞ்சனி     நீலன்          இச்சைச்    சீரகம்

இடபம்,         மிதுனம்        இரண்டும்  நட்பாம் !

கருங்கர்க்      கடகம்          சிம்மம்     செந்தேள்,

கரியன்         சனிக்குப்       பகைவீ     டாகும் !

நட்பு வீடுகள்    :   ரிஷபம், மிதுனம்

பகை வீடுகள்   :   கடகம், சிம்மம், விருச்சிகம்,

அருஞ்சொற்பொருள்

இருஞ்சனி             = கருமை நிறமுள்ள சனி

நீலன்                  = சனி

இச்சைச் சீரகம்        = விரும்பும் வீடுகள்

இடபம்                 = விருச்சிகம்

 

              இராகு, கேது

இராகு          கேதெனும்      இருங்கோள்   நட்பகம்

இரட்டை,       கன்னி,         துலையே !     சிலையே !

சுறவம்,        மீனம்           நட்பாம் !       பகையகம்

சூல்கர்க்        கடகம்,         சிம்மம்         இரண்டே !

நட்பு வீடுகள்    :  மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம்

பகை வீடுகள்   :   கடகம், சிம்மம்

அருஞ்சொற்பொருள்

இருங்கோள்                         = பெரிய

இரட்டை                             = மிதுனம்

துலை                               = துலாம்

சிலை                               = தனுசு

சுறவம்                              = மகரம்

 

    நட்பு வீடு                கிரகம்              பகை வீடு

விரு, தனு, கட, மீன                 சூரியன்                ரிஷ, மகர, கும்பம்

மிது, சிம், கன்னி                    சந்திரன்               இல்லை           

சிம், தனு, மீனம்                     செவ்வாய்             மிது, கன்னி       

ரிஷ, சிம், துலாம்                   புதன்                   கடகம், விருச்சிகம்

மேழ, சிம், கன், விரு                குரு                    ரிஷ, மிது, துலாம்

மிது, தனு, மகர, கும்                சுக்கிரன்               கடகம், சிம்மம்    

ரிஷபம்,மிதுனம்                     சனி                    கட, சிம், விரு

மிது, கன், துலா, தனு, மகர, மீன   இராகு / கேது         கடகம், சிம்ம

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக