திங்கள், 16 ஜனவரி, 2023

பாடல் (06) கோள்களின் உச்ச வீடுகள்!

 

உச்சப்         பாவகம்         உரைக்குவல்        கேளீர் !

செச்சை       ஞாயிறு         செம்மதி             காளை !

சுறவம்        செவ்வாய்       சூழ்புதன்             கன்னி !

குருமனை     கடகம்           கூன்மீன்            வெள்ளி !

காரியன்       துலையில்   கரும்பணி         விடையில் !

பூரியன்         கேது                போந்தனன்       தேளே !

--------------------------------------------------------------------------------------

செச்சை  = (ஆட்டுக் கடா) மேழம்

ஞாயிறு = சூரியன்

மதி = சந்திரன்

காளை = ரிஷபம்

சுறவம் = சுறா (மகரம்)

கூன்மீன் = மீனம்

வெள்ளி = சுக்கிரன்

காரி = சனி

துலை = துலாம்

கரும்பணி = (கரும்பாம்பு) இராகு

பூரியன் = தீயவன்

போந்தனன்  = வந்தடைதல்

தேளே = விருச்சிகம்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054, சுறவம் (தை) 02]

{16-01-2023}

---------------------------------------------------------------------------------------