செவ்வாய், 23 மே, 2023

பாடல் (11) இடப் பலன்கள் !

 

ஒன்றாம்           பாவம்             உடலுயிர்          தோற்றம்

உரைத்திடு         மென்பதை         உணர்வாய்         நீயே !

நன்றாம்           இரண்டே           நயனம்,            குடும்பம்,

நவநிதி,            வாக்கு,            நன்மொழி         இடமே !

மூன்றாம்          பாவம்             முழங்கும்         இளங்கிளை,

முறைமைப்        பேச்சு,             முனை,புகழ்       ஈன்மே !

நான்காம்          பாவம்             நற்றாய்,           உறவினர்,

நன்செய்,           கல்வி,             நல்வாழ்           வினையே !

ஐந்தாம்            பாவம்             அம்மான்,          சந்ததி,

ஆழ்மேல்          படிப்பு,             அனைத்தும்        கழறும் !

பைந்தொடி !       ஆறாம்            பாவம்             நோய்நொடி,

பகைமை,          வழக்கு            பகர்வது           உண்மை !

ஏழாம்             பாவம்             இல்லறத்          துணையே,

இணைகூட்         டாளிகள்,          மாரகம்            சொல்லும் !

தாழரை            எட்டாம்            தானம்             என்பது

தமரக             ஆயுள்,             தன்விதி,           முடிவு !

ஒன்பது            என்பது            உயிர்மெய்         தந்தை,

உயர்குணம்,        பக்தி,              உரைத்திடும்       இடமே !

மன்பதை          வாழ்வில்          மானிடர்           சீவனம்,

மதிமை,           ஆளுமை,          மதிப்பிடம்         பத்தே !

உன்னதம்,         லாபம்,             உடன்பிற          தமயன்,

உதரத்             தமக்கை,           உரைபதி           னொன்றே !

பன்னிரண்          டென்பது           பகரும்            விரயம்,

பைந்தொடி !       இதுவே            பல்லிடப்           பலனே !

 

----------------------------------------------------------------------------------------

பாவம்  = இடம்

உடலுயிர் தோற்றம்  = உடல், உயிர், தோற்றப்பொலிவு

நயனம்  = கண்கள்

நவநிதி  = செல்வம்

நன்மொழி  = வாக்கு சுத்தம்

இளங்கிளை  = தம்பி, தங்கை

முறைமைப் பேச்சு = முறையாகப் பேசுதல்

முனை  = துணிச்சல்

ஈன்மே !  = தருமே !

நற்றாய்  = தாய்

நல்வாழ்வு  = சுக வாழ்வு

அம்மான்  = தாய் மாமன்

சந்ததி = புத்திரர்கள்

ஆழ்  = ஆழ்மனம்

மேல்படிப்பு  = உயர்கல்வி

இல்லறத் துணை = களத்திரம்

கூட்டாளிகள் = வணிகக் கூட்டாளிகள்

மாரகம்   = உயிர் துறப்பு

தாழறை  = (சிறிய அறை ) இராசி வீடு

தானம்  = ஸ்தானம்

தமரகம்  = சுவாசக் குழல்

தன்விதி முடிவு = விதி முடிவு

சீவனம்  = ஜீவனம்

ஆளுமை  = உத்தியோகம்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------

                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக