செவ்வாய், 23 மே, 2023

பாடல் (10) கோள்கள் மறைவு இடங்கள் !

 

சூரியன்         செவ்வாய்       காரியுடன்

            சுலவுமி         ராகும்           கேதைந்தும்

வீரியம்         இழந்து          மறையுமிடம்

           வீடுகள்          எட்டுடன்        பன்னிரண்டாம் !

ஆரியன்         சந்திரன்         புதன்குருவும்

            ஆற்றல்         குறைந்து        மறையுமிடம்

சீரியல்          வீடுகள்         மூன்றாறும்

            சிற்றில்         எட்டுடன்        பன்னிரண்டாம் !

கூரியன்         வெள்ளி         வலுக்குன்றி

            குடிலில்         மறைவிடம்     மூன்றெட்டு !

மூரியன்        ஈசன்            கழல்போற்றி

            முற்றாய்ச்      சொன்னேன்      மறைவுநிலை !

-------------------------------------------------------------------------------------

     காரி = சனி

     சுலவும்  = விண்ணில் சுற்றி வரும்

     ஆரியன் = நற்குணம் உடைய

     சீரியல்  = சிறப்புடைய

     கூரியன்  = கூர்மையான நோக்குடைய

     வெள்ளி  = சுக்கிரன்

     மூரியன்  = வலிமையுடைய

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக