செவ்வாய், 23 மே, 2023

பாடல் (09) கோள்களின் பார்வை வீடுகள் !

 

 

இருப்பிட         மிருந்து          ஏழாம்           வீட்டினை

            எல்லாக்         கோள்களும்      பார்ப்பது         இயல்பு !

சிறப்புப்          பார்வை          செவ்வாய்        குரு,சனி

            செவ்வியர்       மூவரும்         செலுத்திடல்      மரபு !

குருவிழி         பார்ப்பது         குடில்ஐந்         தொன்பது

            குசன்தனி        நோக்கு          குடில்நான்       கெட்டு !

காரிகன்          பார்வையில்      மூன்றும்         பத்தும்

            கடவியல்        கோள்களின்      கட்புலம்         இஃதே !

----------------------------------------------------------------------------------------

செவ்வியர் = தகுதி நிறைந்த

குடில் = வீடு

ஐந்தொன்பது = 5, 9 ஆம் வீடுகள்

குசன் = செவ்வாய்

நான்கெட்டு = 4, 8 ஆம் வீடுகள்

காரியன் = சனி

மூன்றும்பத்தும் = 3, 10 ஆம் வீடுகள்

கடவியல் = விண்ணில் உலா வருகின்ற

கட்புலம் = பார்வை

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக