செவ்வாய், 23 மே, 2023

பாடல் (08) கோள்களின் நீச்சம், கேந்திரம், திரிகோணம், வக்கிரம் !

 

நீச்சம், கேந்திரம், திரிகோணம், வக்கிரம்

 

உச்சம்           தொடங்கி       ஏழாம்           வீடு

           உறுமே           நீச்சம்           உணர்வாய்      நீயே !

ஓச்சுக்           கேந்திரம்        ஒன்றே          நான்கே

            ஓரேழ்           பத்தே           உரைப்பாய்      நீயே !

குச்சில்          கோணம்        ஒன்றே          ஐந்தே

            கூடும்           ஒன்பது         கூறுவை        நீயே !

எச்சம்           இருப்பவை      வக்கிரக்         கோள்கள்

            என்றூழ்         சந்திரன்         பாம்புகள்        ஒழிபே !

--------------------------------------------------------------------------------------

ஓச்சு = உயர்த்து

கேந்திரம் = 1, 4, 7, 10 ஆம் வீடுகள்

குச்சில் கோணம் = திரிகோண வீடு

கூடும் ஒன்பது = நன்மை தரும் ஒன்பது

எச்சம் = எஞ்சி இருப்பவை

வக்கிரக் கோள்கள் = வக்கிரம் அடையும் கோள்கள்

என்றூழ், சந்திரன் = சூரியன், சந்திரன்

பாம்புகள் = இராகு மற்றும் கேது

ஒழிபே = தவிர்த்த எஞ்சிய 5 கோள்களும் ஆகும்.

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக