திங்கள், 26 டிசம்பர், 2022

பாடல் (02) இராசிகள் பன்னிரண்டு !

 

மேடமே         ரிடபம்           மிதுனம்

             மேவிய          கடகம்           சிம்மம்,

ஈடறு            கன்னியும்        துலையே

             எழுந்தேள்        விருச்சிகம்       தனுசம்,

மாசறு           மகரம்           கும்பம்

             மதவலி          மீனம்           இவையே

ஆசறு           பன்னிரு         ராசி

             ஆயிழாய் !       அறிவாய்        நீயே !!

----------------------------------------------------------------------------------------

மேவிய   = ( அனைவரும் ) விரும்பும்   

ஈடறு   =  ஈடில்லாத

எழுந்தேள்   =  எழுச்சி பெற்ற தேள் ராசியான

தனுசம்   =  தனுசு    

மாசறு   =  களங்கமற்ற
மதவலி   =  மிகுந்த வலிமை

ஆசறு   =  குறைகளற்ற

ஆயிழாய் !  =  அணிகலன் பூண்ட பெண்ணே !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 11]

{26-12-2022}

-----------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக