ஞாயிறு, 25 டிசம்பர், 2022

பாடல் (01) விண்மீன்கள் இருபத்தேழு !

 

அசுவதி         பரணி          கார்த்திகை          ரோகிணி

           அழகிய             சீரிடபம்,

வசுமதி         ஆதிரை         புனர்வசு             பூசம்

             வன்சுடர்             ஆயிலியம்,

மகமே          பூரம்            உத்திரம்             அத்தம்

             மணிசித்              திரைசோதி,

விகசி           விசாகம்         அனுடம்              கேட்டை

               விமுலப்             பூராடம்,

உத்திர          ஆடம்            ஓணம்               அவிட்டம்

                ஒண்மீன்             உறுசதயம்,

அத்திரி          பூரட்             டாதியும்              உத்திரட்

                டாதியும்              அலைமீனே ! 

மேவிய         ரேவதி            இருபத்               தேழும்

                மீன்களின்            பெயராமே !

ஓவிய          அழகாய்           ஒளிரும்              விண்ணில்

                 உணர்வாய்           மானிடனே !

----------------------------------------------------------------------------------------

  =  விலங்கு (மிருகம்)

வசுமதி    =  நிலவு போல் ஒளிர்கின்ற

வன்சுடர்    =    அடர்ந்த ஒளி

மணி சித்திரை    =     மணி போல் ஒளிரும்  

விகசி    =     மலர் போன்று திகழும்

வி+மூலம்=விமூலம்=விமுலம்)  =  வி  = விசும்பு

ஒண்மீன் உறு   =   ஒளி மிக்க மீனாக இருக்கும்

அத்திரி    =    விண்

அலைமீன்    =    ஒளியலை எழுப்பும் விண்மீன்

மேவிய   =    ( மற்ற மீன்களுடன் ) சேர்ந்திருக்கும்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 10]

{25-12-2022}

-----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக