கோள்களின் ஆட்சிப் பாவகம் சொல்வேன்
கோபெருந் தேவீ ! குறைதீர்த் தருள்வாய் !
ஒள்ளொளி சூரியன் உறுமனை சிம்மம்
ஊர்மதி ஆட்சி ஊன்றகம் கடகம் !
செவ்வாய் ஆளுகைச் சீரிடம்
மேடம்,
செந்தேள் மனையும் செவ்வாய் மனையே !
நவ்விய புதனகம் மிதுனம் கன்னி,
நலந்தரு குருவகம் தனுசம் மீனம் !
வெள்ளியின் வீடோ விடையும் துலையும்,
விழுமிய சனியகம் மகரமும் குடமும் !
கோளரி ராகு கன்னியில் ஆட்சி,
குறும்பணி கேதின் குடைநிழல் மீனே !
----------------------------------------------------------------------------------------
பாவகம் = இராசி வீடு
உறுமனை = சொந்த வீடு
ஊர்மதி = உலாவரும் சந்திரன்
ஊன்றகம் = ஆட்சி வீடு
ஆளுகைச் சீரிடம் = ஆட்சி வீடு
செந்தேள் = விருச்சிகம்
நவ்விய = நன்மை செய்யும்
வெள்ளி = சுக்கிரன்
விடை = ரிஷபம்
விழுமிய = மேன்மையான
குடம் = கும்பம்
அரி = பாம்பு
குறும்பணி = குட்டையான பாம்பு
குடைநிழல் = ஆட்சி வீடு
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“கணியப்பாடல்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 12]
{27-12-2022}
---------------------------------------------------------------------------------------