கிருத்திகை உதிரம் உதிராடம்
கிரணன் கதிரவன் ஆறாட்டை !
உருகிணி அத்தம் திருவோணம்
உடுமதி சந்திரன் பஃதாட்டை !
மிருகம் சித்திரை மேலவிட்டம்
மிரட்டும் செவ்வாய் ஆண்டேழு !
திருவுடு ஆதிரை சுவாதிசதை
திறம்பும் ராகுலன் பதினெட்டு !
புனரும் விசாகம் பூரட்டம்
பூரணன் குருபரன் ஈரெட்டு !
அனுடம் பூசம் உதிராதி
அலசன் காரியன் பஃதொன்பான் !
கேட்டை ரேவதி ஆயிலியம்
கீதன் புதனெறி பஃதேழு !
கோட்டை அசுவினி மகமூலம்
கோன்மை கேதேழ் ஆண்டலவோ !
பரணிமீன் பூரம் பூராடம்
பளிங்கன் இருபஃ தாண்டலவோ !
தரணியில் வாழும் தமனியரே !
தசைநிலை தவறா துணர்வீரே
!
அருஞ்சொற்பொருள்
உதிரம் =
உத்திரம்
உதிராடம் =
உத்திராடம்
ஆறாட்டை =
ஆறு ஆண்டுகள்
உருகிணி =
ரோகிணி
அத்தம் =
அஸ்தம்
பஃதாட்டை =
பத்து ஆண்டுகள்
மிருகம் =
மிருகசீரிடம்
ஆதிரை =திருவாதிரை
சுவதி =
சுவாதி
சதை =
சதயம்
ராகுலன் = இராகு
புனரும் =
புனர்பூசம்
பூரட்டம் =
பூரட்டாதி
குருபரன் =
குரு
உதிராதி =
உத்திரட்டாதி
காரியன் =
சனி
ப்ஃதொன்பான் =
பத்தொன்பது ஆண்டுகள்
ப்ஃதேழு =
பதினேழு ஆண்டுகள்
கேதேழ் =
கேதுவுக்கு ஏழு ஆண்டுகள்
பளிங்கன் =
சுக்கிரன்
இருபஃது =
இருபது ஆண்டுகள்
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“கணியப்பாடல்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]
{23-05-2023}
-----------------------------------------------------------------------------------