ஏழ்கேது, வெள்ளி இருபஃது , ஆறுகதிர்,
ஊழ்மதிக்(கு) ஒருபஃது
, ஊர்குசனுக்கேழ், – சூழ்ராகு
ஈரொன்பான், ஆசான் ஈரெட்டு, பஃதொன்பான்
காரியவன், பஃதேழ் புதன் !
----------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்
ஏழ்கேது = கேதுவுக்கு ஏழு ஆண்டுகள்
வெள்ளி இருப்ஃது = சுக்கிரனுக்கு இருபது ஆண்டுகள்
ஆறுகதிர் = சூரியனுக்கு ஆறு ஆண்டுகள்
ஊழ்மதிக்கு ஓர்பஃது = சந்திரனுக்கு பத்து ஆண்டுகள்
ஊர்குசன் ஏழ் = செவ்வாய்க்கு ஏழு ஆண்டுகள்
சூழ்ராகு ஈரொன்பான் = இராகுவுக்கு 18 ஆண்டுகள்
ஆசான் இரு எட்டு = குருவுக்கு 16 ஆண்டுகள்
பஃதொன்பன் காரியவன் = சனிக்கு 19 ஆண்டுகள்
பஃதேழ் புதன் = புதனுக்கு 17 ஆண்டுகள்
=====================================================
தசைகள் வரிசை முறை நினைவு வாக்கியம்
(1) கேரளாவைச் சுற்றிப்பார்க்க பானு மதி செவ்வாய் இரவுகுழந்தை சரவணனுடன் புறப்பட்டாள் !
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“கணியப்பாடல்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]
{23-05-2023}
-----------------------------------------------------------------------------------